ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை

கடைசியாகப் புதுப்பித்தது: 18, டிசம்பர், 2017

உலகின் அறிவைப் பகிரவும், வளர்க்கவும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றஇடம் Quora ஆகும். மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றால், அவர்களால் அறிவிற்குப் பங்களிக்கவோ அல்லது மற்றொரு நபரின் கண்ணோட்டத்தைக் கேட்கவோ முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். பின்வரும் விதிகள் Quora-வில் அனைவரும் பாதுகாப்பான அனுபவத்தைப் பெற உதவுகின்றன

நற்பண்புடன்பழகுங்கள், மரியாதை அளியுங்கள்

பின்வருவனவற்றை உள்ளடக்கிய Quora-வின் நற்பண்புடன்பழகுங்கள், மரியாதை அளியுங்கள் ("BNBR") கொள்கையைப் பின்தொடருங்கள்:

ஆக்கப்பூர்வமான வழியில் மற்றவர்களுடன் ஈடுபடுங்கள்

பல்வேறு பின்னணிகள், நம்பிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களுடன் தளத்தை ஒரு சிறந்த ஆதாரமாக உருவாக்குவதற்கு Quora-வில் உள்ள அனைவரும் உள்ளனர் என்று கருதுங்கள். மறுப்பதும் ஏற்கத்தக்கதுதான், அதனால் பிற பதிவாளர்களிடம் தயவுசெய்து நாகரீகமான, மரியாதைக்குரிய விதத்திலும் மற்றும் பரிவுடனும் இருங்கள்.

வெறுப்புமிழும் பேச்சு வேண்டாம்

Quora புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமூகக் கலந்துரையாடலுக்கான ஓர் இடம். அது இனம், பாலினம், மதம், தேசியவாதம், இனவியம், அரசியல் குழு, பாலியல் சார்பு அல்லது இதே போன்ற வேறொரு பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனிநபர் அல்லது குழுவைத் தாக்கும் அல்லது இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தை பொறுத்துக் கொள்ளாது. இந்த தலைப்புகள் குறித்த எந்தப் பொதுமைப்படுத்தல்களும் முடிந்தவரை நடுநிலையாக கூறப்படவேண்டும்.

துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் கூடாது

தனிப்பட்ட தனிநபர்கள் மீதான தவறான நடத்தை அனுமதிக்கப்படாது. மீண்டும் மீண்டுமான மற்றும் தேவையற்றதொடர்பு கொள்ளுதல் , துன்புறுத்தலின் ஒரு வடிவமாக அமைகிறது. உள்ளடக்கமானது, மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களைச் செய்யவோ அல்லது சுய தீங்கு உட்பட வன்முறைகளை ஆதரிக்கவோ கூடாது.

மற்றவர்களின் உரிமைகளை மதியுங்கள்

அடையாளம் மற்றும் ஏமாற்று நடவடிக்கை

உங்கள் Quora சுயவிவரம் உங்கள் உண்மையான பெயர் அல்லது சட்டப்பூர்வமாக இணைக்கப்பட்ட வணிகப் பெயரைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் துல்லியமான மற்றும் உண்மையுள்ள சான்றுகளை பயன்படுத்த வேண்டும். மற்றொரு நபரைப் போன்று ஆள்மாறாட்டம் செய்வதற்கு, அங்கீகாரமின்றி மற்றொரு நிறுவனமாக செயல்படுவதற்கு அல்லது பல கணக்குகளை உருவாக்குவதற்கு Quora-வை பயன்படுத்தக் கூடாது.

அறிவுசார் சொத்து மற்றும் தனிப்பட்ட உரிமைகள்

மற்றொரு தரப்பின் எந்த அறிவார்ந்த சொத்து அல்லது தனிப்பட்ட உரிமையை மீறுகின்ற உள்ளடக்கத்தை பதிவிடக் கூடாது. மற்றொரு ஆதாரத்திலிருந்து எடுக்கப்பட்டக் கட்டுரை சரியாக நன்றி தெரிவித்தல் கூறப்பட்டு, அடைப்பு மேற்கோள்களால் காட்டப்பட வேண்டும். மேலும் அறிய.

Quora தளத்தை மதியுங்கள்

ஸ்பாம் கூடாது

ஸ்பாமை பதிவிட அல்லது ஈர்க்க Quora-வை பயன்படுத்தக் கூடாது. மேலும் அறிய

தீங்கிழைக்கும் அல்லது சட்டவிரோத செயல்பாடு கூடாது

வைரஸ்கள், தீம்பொருள் மற்றும் பிற தீங்கிழைக்கும் நிரல்களுக்கு பங்களிக்கக் கூடாது அல்லது Quora-வின்செயல்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தலையிடும் அல்லது பாதுகாப்பு அல்லது அங்கீகாரநடவடிக்கைகளை மீற முயலும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. சட்டவிரோத அல்லது மோசடி நடவடிக்கையில் ஈடுபடவோ அல்லது சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கவோ Quora-வைப் பயன்படுத்தக் கூடாது.

பிற Quora கொள்கைகளைப் பின்பற்றவும்

அவ்வப்போது சேர்க்க அல்லது மாற்றப்படும் Quora-வின் பிற கொள்கைகளைப் பின்பற்றவும். மேலும் அறிய

பிரச்சினைகளைப் பற்றி புகாரளித்தல்

எங்கள் வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கைகளை மீறுவதாக நீங்கள் நம்பும் எதையாவது பார்த்தால், தயவுசெய்து அதை தயாரிப்புக்குள்ளே இருக்கும் புகாரளித்தல் கருவியைப் பயன்படுத்தி அல்லது எங்கள் தொடர்புப் படிவம் வழியாகப் புகாரளிக்கவும்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கையை மீறுவது, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அல்லது Quora-விற்கான பயனரின் அணுகல் கட்டுப்பாடு அல்லது நிறுத்தத்திற்குவழிவகுக்கலாம். மேலும் அறிய