பதிப்புரிமைக் கொள்கை

Quora-வில், எங்கள் பயனர்கள் மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். Quora-வின் பதிப்புரிமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் பெரிய எழுத்திடப்பட்ட சொற்கள், Quora-வின் சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள அதே அர்த்தம் கொண்டவை, அது இந்த கொள்கையை அதன் விதிமுறைகளுடன் சேர்த்துக் கொள்கிறது.

பதிப்புரிமை மீறலை ஊக்கமிழக்கச் செய்தல்

நாங்கள் Quora பயனர்களை மற்றவரின் பதிப்புரிமைகளை மீறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்றவர்களின் பதிப்புரிமைகளை நீங்கள் மீறினால், உங்கள் உள்ளடக்கம் முழுமையாகவோ பகுதியாகவோ அகற்றப்படலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம். மற்றவர்களின் பதிப்புரிமை அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளை தொடர்ச்சியாக மீறுபவர்கள் அல்லது தொடர்ச்சியாக மீறுவதாக குற்றஞ்சாட்டப்படும் பயனர்களின் கணக்குகளை சரியான சூழ்நிலைகளில் எங்கள் விருப்பத்தின்படி முடக்கவுது மற்றும்/அல்லது நிறுத்துவது எங்களின் கொள்கை.

பதிப்புரிமை உரிமையாளர்களுக்கான துணையாதாரம்: DMCA அறிவிப்புடன் புகார் தெரிவித்தல்

பதிப்புரிமை உரிமையாளர்களுக்காகவோ அல்லது பதிப்புரிமை உரிமையாளர் சார்பாக செயல்படுவதற்கு அங்கீகாரம் பெற்றவர்களிடமிருந்தோ, அவர்களின் உள்ளடக்கத்தின் மீறல் பயன்பாட்டைப் பற்றி புகாரளிக்கவும் கூட நாங்கள் ஓர் இயங்குமுறையை வழங்குகிறோம். 1998 ஆம் ஆண்டின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் ("DMCA") விதிமுறைக்கு இணங்க, எங்கள் பதிப்புரிமை முகவரிடம் புகாரளிக்கப்பட்ட பதிப்புரிமை மீறல் உரிமைகோரல்களுக்கு விரைவாக பதிலளிப்போம். கீழே, முறையான புகாரின் தேவைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். உங்கள் வசதிக்காக, DMCA இன் மொத்த உரையை இங்கு காணலாம்: http://www.copyright.gov/legisla....

DMCA இன் தேவைகளுடன் ("DMCA அறிவிப்பு") இணங்கும் ஒரு DMCA புகார் அறிவிப்பை எங்களுக்கு வழங்க, நீங்கள்:

 1. உங்கள் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) உட்பட உங்கள் தொடர்புத் தகவலை வழங்க வேண்டும்.
 2. மீறப்பட்டதாக நீங்கள் கோரும் பதிப்புரிமை பெற்ற படைப்புகளை அடையாளம் காணுங்கள். உங்கள் DMCA அறிவிப்பில் பல பதிப்புரிமைப் படைப்புகள் இருந்தால், மீறப்பட்டதாக நீங்கள் கோரும் பதிப்புரிமை பெற்ற படைப்புகளின் பிரதிநிதி பட்டியலை நீங்கள் வழங்கலாம்.
 3. நீங்கள் அகற்ற அல்லது முடக்கக் கோரும் சந்தேகப்படும் மீறல் பொருளின் ஒவ்வொரு நிகழ்வையும் கண்டறிவதற்கு எங்களுக்கு நியாயமான அளவு தகவலை வழங்கவும். (உதாரணமாக, Quora தளத்தில் பதிப்பு காணப்படும் ஒவ்வொரு URL ஐயும் வழங்குவதன் மூலம்.)
 4. DMCA அறிவிப்பின் உள்ளடக்கத்தில் பின்வரும் அறிக்கைகளைச் சேர்க்கவும்:

  பதிப்புரிமையுள்ள பொருள் அல்லது அத்தகைய பொருட்களுக்கான குறிப்பு இணைப்பு ஆகியவற்றின் சர்ச்சைக்குரிய பயன்பாடு, பதிப்புரிமை உரிமையாளர், அதன் முகவர் அல்லது சட்டத்தால் (எ.கா., நியாயமான பயன்பாடாக) அங்கீகரிக்கப்படவில்லை என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று அறிவிக்கிறேன்.

  இந்த DMCA அறிவிப்பில் உள்ள தகவல்கள் துல்லியமானவையாகும் மற்றும் பொய்சாட்ச்சியின் அபராதத்தின் கீழ், விதிமீறலாகக் கூறப்படும் பிரத்யேக பதிப்புரிமை உரிமையாளரின் சார்பாக செயல்படுவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளேன் அல்லது நான் தான் உரிமையாளர் என நான் அறிவிக்கிறேன்.
 5. நேரடி அல்லது மின்னணு கையொப்பத்தைச் சேர்க்கவும் (எ.கா. உங்கள் அச்சிடப்பட்ட பெயரைத் தட்டச்சு செய்தல்)
 6. Quora-விற்கான நியமிக்கப்பட்ட பதிப்புரிமை முகவரிடம் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விஷயங்களுடன் இந்த DMCA அறிவிப்பை வழங்கவும்::

  கவனம்: பதிப்புரிமை முகவர்
  copyright@quora.com

  அல்லது

  கவனம்: பதிப்புரிமை முகவர்
  Quora Inc.
  605 கேஸ்ட்ரோ ஸ்ட்ரீட்
  மவுன்டேன் வ்யூ, கலிஃபோர்னியா 94041

உங்கள் வசதிக்காக, பதிப்புரிமை மீறலை நீங்கள் புகாரளிக்க விரும்பினால், மின்னஞ்சல் மூலம் நீங்கள் நிறைவு செய்து அனுப்ப இந்த இணையப் படிவத்தை வழங்குகிறோம்.

வேகமாக கையாள்வதற்கு, எங்கள் வலைத்தளப் படிவத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மாற்று வழிமுறையைப் பயன்படுத்தினால், உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்துவது தாமதமாகலாம்.

உங்களுக்கு எதிராக ஒரு பதிப்புரிமை புகார் இருந்தால்

பதிப்புரிமை புகார் காரணமாக உங்கள் உள்ளடக்கத்தின் பதிவு அல்லது பகுதியை நீக்கியதை அல்லது இடைநிறுத்தப்பட்டிருப்பதன் அறிவிப்பை நீங்கள் பெற்றால், அது உள்ளடக்க உரிமையாளரின் வேண்டுகோளின்படி அகற்றப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். உள்ளடக்கம் தவறுதலாக அகற்றப்பட்டிருப்பதாக நீங்கள் நம்பினால், DMCA எதிர் அறிவிப்பை (இத்தகைய எதிர் அறிவிப்புக்கான முறையான வடிவம் கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) தாக்கல் செய்ய உங்களுக்கு விருப்பத்தேர்வு உள்ளது. முறையான எதிர் அறிவிப்பைப் பெறும்போது, பதிப்புரிமை மீறல் குறித்து முதலில் புகார் செய்த நபருக்கு நாங்கள் அதை அனுப்புவோம். அசலாகப் புகாரளித்தவரிடம் இருந்து பிரச்சினைக்குரிய உள்ளடக்கத்தின் மீதான மேலதிக மீறலைத் தடுக்கும் ஒரு நீதிமன்ற ஆணை வேண்டும் என்று குறிப்பிட்டு 10 வணிக நாட்களுக்குள் ஓர் அறிவிப்பை நாங்கள் பெறவில்லை என்றால், உங்கள் கணக்கின் பதிவில் இருந்து புகாரை அகற்றிவிடுவோம். மேலும் எங்கள் விருப்பத்தின்படி, அகற்றப்பட்ட உள்ளடக்கத்தை நாங்கள் மாற்றலாம்.

DMCA எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்வது எப்படி

மோசடியான அல்லது ஏமாற்றும் நோக்கம் கொண்ட DMCA அறிவிப்புகளின் அல்லது எதிர் அறிவிப்புகளின் சமர்ப்பிப்புகளால் சாத்தியமான கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இத்தகைய விளைவுகள் DMCA-வின் பிரிவு 512(f) இன் கீழ் சுமத்தப்படலாம். எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் முன், அகற்றப்பட்ட உள்ளடக்கம் அல்லது தவறுதலாக அகற்றப்பட்டது என்று நீங்கள் நம்புகின்ற உள்ளடக்கத்தின் உண்மையான உரிமையாளர் நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறான எதிர் அறிவிப்பை சமர்ப்பிப்பதன் விளைவுகளை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியமானது.

மேலே தரப்பட்டுள்ளபடி, ஒரு முறையான எதிர் அறிவிப்பு Quora-வின் பதிப்புரிமை ஏஜென்டுக்கு அனுப்பப்பட வேண்டும் மற்றும் அதில் பின்வருவன அடங்கியிருக்க வேண்டும்:

 1. உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்
 2. எங்களால் அகற்றப்பட்ட அல்லது முடக்கப்பட்ட உள்ளடக்கத்தின் URLகள் (அறிவிப்பு மின்னஞ்சலில் வழங்கப்பட்ட இணைப்பை நீங்கள் நகலெடுத்து ஒட்டலாம்)
 3. பின்வரும் அறிக்கைகள்:

  என் முகவரி அமைந்துள்ள நீதித்துறை மாவட்டத்தில் மத்திய மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு நான் ஒப்புக்கொள்கிறேன் அல்லது என் முகவரி அமெரிக்காவிற்கு வெளியில் இருந்தால், Quora Inc. அமைந்துள்ள எந்த நீதித்துறை மாவட்டத்திற்கும் ஒப்புக்கொள்கிறேன். மீறல் பதிப்புரிமை உரிமை கோரியவரிடமிருந்து செயல்முறைச் சேவையை ஏற்கிறேன்.

  அகற்றப்பட வேண்டிய அல்லது முடக்கப்பட வேண்டிய உள்ளடக்கம், தவறாகவோ அல்லது தவறாக அடையாளம் காணப்பட்டதன் விளைவாகவோ அகற்றப்பட்டிருக்குமென நான் நம்புகிறேன் என்பதை பொய்ச்சான்று தண்டனையின் கீழ் நான் அறிவிக்கிறேன்.
 4. உங்கள் நேரடி அல்லது மின்னணு கையொப்பம் (எ.கா. உங்கள் முழு பெயரை தட்டச்சு செய்தல்)