சேவை விதிமுறைகள்

Quora-வின் சேவை விதிமுறைகளுக்கு ஒரு அறிமுகம்

Quora-விற்கு வரவேற்கிறோம்! எங்கள் சேவை விதிமுறைகளின் சிறப்புக்கூறுகளின் சுருக்கம் இதோ:

 • உலகின் அறிவைப் பகிரவும் வளர்க்கவும் செய்வதே Quoraவின் இலட்சியம் ஆகும் கேள்விகளைக் கேட்பதற்கும், தரமான பதில்களையும் தனித்துவமான உள்நோக்குகளை வழங்க வல்ல மக்களுடன் இணைந்திருப்பதற்கும், ஒரு சிறந்த களத்தை Quora தளம் வழங்குகிறது. இது மக்களுக்கு ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும் உலகத்தை நன்றாக புரிந்து கொள்வதற்கும் சக்தி அளிக்கிறது.
 • நீங்கள் பதிவிடும் உள்ளடக்கம் உங்களுக்குச் சொந்தமானது; நீங்கள் எங்களுக்கும் மற்றும் Quora தளத்தின் பிற பயனர்களுக்கும் அதைப் பயன்படுத்த சில உரிமைகளையும் உரிமங்களையும் வழங்குகிறீர்கள். இந்த உரிமங்களின் விவரங்கள் கீழே பிரிவு 3(c)-இல் விவரிக்கப்பட்டுள்ளன.
 • நீங்கள் பதிவிடும் உள்ளடக்கங்களுக்கு நீங்கள் பொறுப்பு. அந்த உள்ளடக்கத்தை பதிவிடுவதற்குத் தேவையான உரிமை உங்களிடம் உள்ளது மற்றும் மற்றொரு தரப்பின் சட்ட உரிமைகள் (எடுத்துக்காட்டாக, அவதூறு) அல்லது எந்த பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுவதாக இல்லை என்பதை உங்கள் உள்ளடக்கம் உறுதிப்படுத்துவதையும் இது உள்ளடக்கிறது.
 • நீங்கள் அந்த உள்ளடக்கத்தை Quora தளத்துடன் தொடர்புபடுத்தி மற்றும் "மறுபயன்பாட்டுக்கானது அல்ல" என்று குறிப்பிடுவது உட்பட அசல் பதிவரின் உரிமைகளை மதிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் Quoraவிலிருந்து உள்ளடக்கத்தை நீங்கள் வேறு எங்கும் பதிவிடலாம்.
 • பயனர்களால் பதிவிடப்பட்ட உள்ளடக்கத்தை நாங்கள் ஆமோதிப்பதோ அல்லது சரிபார்ப்பதோ இல்லை. எங்களுடைய உள்ளடக்கம் மற்றும் பொருட்கள் எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லாமல் உங்களுக்கு "அப்படியே" வழங்கப்படுகின்றன. Quora தளத்தின் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு நீங்கள் முற்றிலும் பொறுப்பு. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களிடமிருந்து வரும் பதிவுகளை உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைக்கான தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாகக் கருதக்கூடாது.
 • எங்கள் தளத்தின் விதிகளைப் பின்பற்ற ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் Quora தளத்தைப் பயன்படுத்தும்போது, எங்கள் சேவை விதிமுறைகளையும் ஏற்கிறீர்கள், எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்கிறீர்கள் மற்றும் எங்கள் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை, பதிப்புரிமைக் கொள்கை மற்றும் வர்த்தக முத்திரைக் கொள்கையைப் பின்பற்ற ஒப்புக்கொள்கிறீர்கள்.
 • நீங்கள் பின்னூட்டம் வழங்க மற்றும் புகார்களை அளிக்க நாங்கள் கருவிகள் வழங்குகிறோம். உங்கள் அறிவுசார் சொத்துரிமை, பிற சட்டங்கள், அல்லது Quora-வின் கொள்கைகளை யாராவது மீறியதாக நீங்கள் நினைத்தால், எங்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்கள் இன்-ப்ராடக்ட் அறிக்கையிடல் கருவியைப் பயன்படுத்தி ஒரு புகாரை அளிக்கலாம்.

நீங்கள் Quora தளத்தில் சேர விரும்புவதற்காக மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் முழு சேவை விதிமுறைகளையும் படிக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.

Quora சேவை விதிமுறைகள்

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 23, 2018

Quora-விற்கு வரவேற்கிறோம்! Quora, அறிவைப் பெருக்குவதற்கும் பகிர்வதற்குமான ஓர் உயரிய இடம் ஆகும். இது ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், உலகை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் மக்களுக்கு வல்லமை அளிக்கிறது.

இந்தச் சேவை விதிமுறைகள் ("சேவை விதிமுறைகள்") "நீங்கள்" அல்லது "உங்களுக்கு" மற்றும் Quora, Inc. ("Quora" "நாங்கள்" அல்லது "எங்களுக்கு") இடையேயான ஒப்பந்தத்தை ("ஒப்பந்தம்") அமைக்கிறது. இது இணையம் மற்றும் செயலிகளின் மூலம் நாங்கள் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பயன்பாட்டை நிர்வகிக்கிறது (கூட்டாக "Quora தளம்").

தயவுசெய்து இதனை வாசிப்பதை உறுதி செய்திடுங்கள். ஏனெனில், Quora தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

 1. Quora தளத்தின் இலட்சியம்

  உலகின் அறிவைப் பகிரவும் வளர்க்கவும் செய்வதே Quoraவின் இலட்சியம் ஆகும். கேள்விகளைக் கேட்பதற்கும், தரமான பதில்களையும் தனித்துவமான உள்நோக்குகளை வழங்க வல்ல மக்களுடன் இணைந்திருப்பதற்கும், ஒரு சிறந்த களமாக Quora தளம் உள்ளது. இது ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், உலகை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் மக்களுக்கு வல்லமை அளிக்கிறது.
 2. Quora தளத்தை பயன்படுத்துதல்
  1. இதை யார் பயன்படுத்தலாம். 13 வயதுக்கு கீழ் உள்ள எந்த ஒருவருக்கும் Quora தளத்தின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் வயது நீங்கள் வாழும் அதிகார எல்லையில் பெரியவராவதற்கான குறைந்தபட்ச வயது என்பதை நீங்கள் குறிக்கிறீர்கள் அல்லது அவ்வாறு இல்லாவிட்டால், உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர், இந்த சேவை விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு, உங்கள் சார்பில் இந்த ஒப்பந்தத்தை ஏற்று, உங்கள் பயன்பாட்டிற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
  2. பதிவு. நீங்கள் Quora தளத்தில் ஒரு சுயவிவரத்தை அமைக்கும்போது, உங்களைப் பற்றிய சில தகவலை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். Quora தளத்தில் உங்கள் கணக்கை உருவாக்கும்போது, உங்கள் உண்மையான பெயர் உட்பட துல்லியமான தகவலை எங்களுக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள். பதிவில் ஒரு பகுதியாக நீங்கள் வழங்கும் தகவலை நாங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையின்படி கையாள்வோம். உங்கள் கடவுச்சொல்லின் இரகசியத்தை பராமரிப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  3. தனியுரிமைக் கொள்கை. எங்கள் தனியுரிமைக் கொள்கையில் நடைமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. Quora தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பதிவு செய்யப்பட்டபயனாளராக இருந்தாலும் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொள்கிறீர்கள்.
  4. ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை. Quora தளத்தில் மற்றவர்களுடனான உங்கள் தொடர்பாடல்களில், அனைத்து நேரங்களிலும் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கையைப் பின்பற்ற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
  5. முடித்தல். கணக்கு அமைப்புகளுக்கு சென்று உங்கள் கணக்கை முடக்குவதன் மூலம் உங்கள் கணக்கை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மூடலாம். நீங்கள் எந்த Quora கொள்கையையும் மீறினால் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும், உங்கள் Quora கணக்கை நாங்கள் நிறுத்தலாம் அல்லது இடைநிறுத்தலாம்.
  6. Quora தளத்திற்கு மாற்றங்கள். Quora தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் எப்போதும் முயல்கிறோம். நாங்கள் அம்சங்களைச் சேர்க்க அல்லது மாற்றத் தேவையிருக்கலாம். மேலும் உங்களுக்கு அறிவிக்காமல் நாங்கள் அவற்றைச் செய்யலாம்.
  7. பின்னூட்டம். Quora தளத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய உங்கள் பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகளை வரவேற்கிறோம். https://help.quora.com/hc/en-us/...-இல் பின்னூட்டத்தை சமர்ப்பிக்கத் தயங்க வேண்டாம். பின்னூட்டத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், எங்கள் விருப்பப்படி, அதனைப் பயன்படுத்த, வெளிப்படுத்த, மற்றபடி பின்னூட்டங்களை, முழுமையாகவோ பகுதியாகவோ, இலவசமாகவோ பயன்படுத்த, நீங்கள் இழப்பீடு வேண்டாமல் எங்களுக்கு உரிமை அளிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
 3. உங்கள் உள்ளடக்கம்.
  1. உங்கள் உள்ளடக்கத்தின் வரையறை. பதிவுகள், உரைகள், புகைப்படங்கள், காணொளிகள், இணைப்புகள், மற்றும் கோப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு Quora தளம் உங்களுக்கு உதவுகிறது. Quora தளம் வழியாக நீங்கள் பதிவேற்றும், வெளியிடும் அல்லது மற்றவர்களுக்கு காட்சிபடுத்தும் அனைத்து தகவல்களும் கூட்டாக "உங்கள் உள்ளடக்கம்" என குறிப்பிடப்படும். Quora தளத்தைப் பயன்படுத்துவதன் ஒரு பகுதியாக, உங்கள் உள்ளடக்கத்தை பொது மக்கள் பார்க்க முடியும் என்பதை ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள்.
  2. உடைமை உரிமை. நீங்கள் அல்லது உங்கள் உரிமதாரர்கள், பொருந்தக்கூடிய வகையில், கீழுள்ள எங்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்டதல்லாத உரிமைகளுக்குட்பட்டு, உங்கள் உள்ளடக்கத்திலுள்ள பதிப்புரிமை மற்றும் பிற அறிவுசார் சொத்துரிமையின் உடைமை உரிமையைத், தக்க வைக்கிறீர்கள்.
  3. உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமம் மற்றும் அனுமதி.
   1. Quora தளத்தில் உங்கள் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிப்பது, பதிவிடுவது அல்லது காட்சிபடுத்துவதன் மூலம், Quora மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு எந்தவொரு தனிப்பட்டதல்லாத, உலகளாவிய, ஆதாய உரிமையற்ற, முழுமையாக செலுத்தப்பட்ட, இடமாற்றக்கூடிய, துணை உரிமம் வழங்கக்கூடிய (பல அடுக்குகளின் மூலம்) வகையில் பயன்படுத்த, நகலெடுக்க, மறுஉருவாக்க, இயக்க, தழுவ, திருத்த, தருவிக்கப்பட்ட படைப்புகளை உருவாக்க, வெளியிட, அனுப்ப, சேமிக்க, காட்சிப்படுத்த மற்றும் விநியோகிக்க, மொழிபெயர்க்க, தொடர்புகொள்ள மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்ய உரிமம் வழங்குகிறீர்கள். மேலும் Quora தளத்தின் செயல்பாடு அல்லது பயன்பாடு அல்லது எந்த மற்றும் அனைத்து ஊடகத்திலும் அல்லது விநியோக முறைகளிலும் (இப்போது அறியப்பட்ட அல்லது பின்னர் உருவாக்கப்பட்டவை) Quora தளத்தில் அல்லது எங்கள் வர்த்தகக் கூட்டாளர்களின் விளம்பரப்படுத்துதல், விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் தொடர்பாக உங்கள் உள்ளடக்கத்தை பயன்படுத்த உரிமம் வழங்குகிறீர்கள். பிற நிறுவனங்கள், அமைப்புகள், வர்த்தகக் கூட்டாளர்கள் அல்லது ஆலோசனைக்காக Quora-வுடன் கூட்டுவைக்கும் தனிநபர்கள், ஒளிபரப்பு, தகவல்தொடர்பு மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கு கிடைக்கப்பெறச் செய்வது, Quora தளத்தில் அல்லது பிற ஊடகங்கள் அல்லது விநியோக முறைகள் மூலம் உங்கள் உள்ளடக்கத்தை விநியோகிப்பது அல்லது வெளியிடுவதற்கான உரிமையை இந்த உரிமம் உள்ளடக்குகிறது என்பதை ஏற்கிறீர்கள். எங்களின் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டு, Quora தளத்தின் மற்ற பயனர்களும் உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த, நகலெடுக்க, மறுஉருவாக்க, தழுவ, திருத்த, தருவிக்கப்பட்ட படைப்புகளை உருவாக்க, வெளியிட, அனுப்ப, சேமிக்க, காட்சிப்படுத்த மற்றும் விநியோகிக்க, மொழிபெயர்க்க, தொடர்புகொள்ள மற்றும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் உரிமையையும் இந்த உரிமம் உள்ளடக்கியுள்ளது. மற்ற பயனர்கள் உங்கள் பதில்களை மொழிபெயர்க்க நீங்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் உங்கள் சுயவிவர அமைப்புகளில் உலகளாவிய ரீதியில் மொழிபெயர்ப்பிலிருந்து விலகியிருக்கலாம் அல்லது மொழிபெயர்ப்புக்கு அல்ல என்று சில பதில்களை குறிப்பிடலாம்.
   2. பெயர் வெளியிடப்படாமல் பதிவிட்ட பதில்களைத் தவிர, ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலைப் பதிவு செய்த பின்னர் http://www.quora.com-இல் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பதிலைத் திருத்தலாம் அல்லது அதனைப் பொதுமக்கள் பார்வையிலிருந்து நீக்கலாம். இருப்பினும், கூட்டமைப்புத் தடங்கள் அல்லது www.quora.com-க்கு வெளியே முன்னர் விநியோகிக்கப்பட்ட மற்ற முறைகள் மீதான பதிவின் பதிலை அகற்றுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் பதில்களிலிருந்து சந்தேகத்திற்குரிய ஸ்பாமை Quora நீக்கிவிடலாம். நீங்கள் ஒரு கேள்வியை பதிவிட்டதும், எந்த நேரத்திலும் அது பிற பயனர்களால் அல்லது Quora மூலமாக திருத்தப்படலாம் அல்லது நீக்கப்படலாம். நீங்கள் செய்த திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் மற்ற பயனர்களுக்குப் புலப்படலாம். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர, நீங்கள் பதிவிடும் எந்த கேள்வியையும் நகலெடுக்க, காட்சிப்படுத்த, அனுப்ப, வெளியிட, இயக்க, விநியோகிக்க, சேமிக்க, திருத்த மற்றும் வேறுவகையில் பயன்படுத்த மற்றும் அந்த உரிமைகளை மற்றவர்களுக்குத் துணை உரிமம் வழங்குவதற்கான Quora-வின் உரிமையானது, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு, நிரந்தரமானது மற்றும் மாற்றமுடியாதது.
   3. சட்டப்படி அல்லது நல்ல நம்பிக்கையுடன் உங்கள் உள்ளடக்கம் மற்றும் தொடர்புடைய தகவல்களின் பாதுகாப்பு அல்லது வெளிப்படுத்தலானது நியாயமாக பின்வருவனவற்றுக்கு அவசியமாக இருந்தால், அவற்றை Quora பாதுகாக்கலாம் மற்றும் வெளிப்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள்: (a) சட்டச் செயல்முறை, பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது அரசாங்கக் கோரிக்கைகளுக்கு இணங்க; (b) இந்தச் சேவை விதிமுறைகளை அமல்படுத்த; (c) உங்கள் உள்ளடக்கத்தில் எவையேனும் மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறுவதாகச் செய்யப்படும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க; (d) மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களைக் கண்டறிந்து, தடுக்க அல்லது குறிப்பிட; அல்லது (e) Quora, அதன் பயனர்கள் அல்லது பொது மக்களின் உரிமைகள், சொத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாக்க.
   4. கணினி வலையமைப்புகள், சாதனங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களுக்கு அனுப்பும், காட்சிப்படுத்தும் அல்லது விநியோகிக்கும் பொருட்டு, உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் திருத்தலாம், தழுவலாம் அல்லது அதிலிருந்து தருவிக்கப்பட்ட படைப்புகளை உருவாக்கலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் உள்ளடக்கத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எந்த நேரத்திலும் நாங்கள் நீக்கலாம் அல்லது வெளியிட மறுக்கலாம்.
   5. மேலும், மூன்றாம் தரப்பினரால் Quora தளத்தின் வெளியே உங்கள் உள்ளடக்கத்தின் அங்கீகாரமற்ற பயன்பாட்டிற்கும் அல்லது எங்கள் சேவை விதிமுறைகளை மீறுவதற்கு எதிராக அமலாக்க நடவடிக்கையை எடுப்பதற்கும், உங்கள் தனிப்பட்டதல்லாத முகவராக நாங்கள் செயல்பட அனுமதியையும் அதிகாரத்தையும் எங்களுக்கு வழங்குகிறீர்கள்.
  4. உங்கள் உள்ளடக்கத்திற்கான உங்கள் பொறுப்பு. Quora தளத்தில் உங்கள் உள்ளடக்கத்தை இடுகையிடுவதன் மூலம், நீங்கள் எங்களுக்கு குறிப்பிடுவதும் உத்தரவாதம் அளிப்பதும் பின்வருமாறு: i) உங்களிடம் உடைமை உரிமைகள் உள்ளது அல்லது உங்கள் உள்ளடக்கங்களை பயன்படுத்த தேவையான தரப்பினரிடமிருந்து அனைத்துத் தேவையான உரிமங்கள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுள்ளீர்கள். மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள் உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கியுள்ளீர்கள் மற்றும் ii) உங்கள் உள்ளடக்கத்தை பதிவிடுவது மற்றவர்களுடைய அறிவுசார் சொத்து அல்லது தனிப்பட்ட உரிமை அல்லது எந்த பொருந்தும் சட்டம் அல்லது கட்டுப்பாட்டை மீறவில்லை. மற்றவர்களின் அறிவுசார் சொத்து அல்லது தனிப்பட்ட உரிமைகளின் மீறுவதைத் தவிர்த்தல் அல்லது உங்கள் உள்ளடக்கம் தொடர்பாக சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறுதலைத் தவிர்த்தல் ஆகியவற்றின் முழு பொறுப்பையும் ஏற்கிறீர்கள். உங்கள் உள்ளடக்கமானது, Quora-வின் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை, பதிப்புரிமைக் கொள்கை, வர்த்தக முத்திரைக் கொள்கை, பிற வெளியிடப்பட்ட Quora கொள்கை அல்லது பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையை மீறவில்லை என்பதை உறுதிசெய்வதற்கு நீங்கள்தான் பொறுப்பு. அனைத்து ஆதாய உரிமைகள், கட்டணங்கள், உங்கள் உள்ளடக்கத்தின் காரணத்தால் எந்தவொரு நபருக்கும் கொடுக்கப்பட வேண்டிய நிதியம் ஆகியவற்றைச் செலுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.
 4. எங்கள் உள்ளடக்கங்கள் மற்றும் பொருட்கள்
  1. எங்கள் உள்ளடக்கங்கள் மற்றும் பொருட்களின் வரையறை Quora தளத்தில் உள்ள அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து அறிவுசார் சொத்துக்களும் (குறிப்பாக எங்கள் மென்பொருள், Quora குறிகள், Quora சின்னம் உள்ளிட்ட, ஆனால் அவை மட்டுமல்லாமல், ஆனால் உங்கள் உள்ளடக்கம் தவிர்த்து) Quora Inc, அல்லது அதன் துணை மற்றும் இணை நிறுவனங்கள் அல்லது எங்களுக்கு உரிமமளிக்கப்பட்ட பிற Quora பயனர்களால் பதிவுசெய்யப்பட்ட உள்ளடக்கத்தின் சொத்தாகும் (கூட்டாக "எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்கள்")
  2. தரவு. உங்கள் அல்லது மற்றவர்களின் Quora தளப் பயன்பாடு பற்றி Quora சேகரிக்கும் அனைத்து தரவும் ("தரவு") Quora Inc., அதன் துணை மற்றும் இணை நிறுவனங்களின் சொத்து. தெளிவுபடுத்தலுக்காக, தரவு உங்கள் உள்ளடக்கத்தை உள்ளடக்கவில்லை மற்றும் எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்களிலிருந்து தனிப்பட்டது.
  3. உங்களுக்கான எங்கள் உரிமம்.
   1. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, Quora தளத்தின் உங்கள் பயன்பாடு தொடர்பாக Quora தளத்தில் எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த மற்றும் அணுக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட, தனிப்பட்டதல்லாத உரிமத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.
   2. எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்களை இணையத்தில் எந்த இடத்திலும் மறுபதிவிட, உலகளாவிய, ஆதாய உரிமையற்ற, மாற்றக்கூடிய, வகுந்தளிக்கமுடியாத மற்றும் தனிப்பட்டதல்லாத உரிமத்தை கீழுள்ள நிபந்தனையின் பேரில் Quora வழங்குகிறது: (a) கேள்விக்குரிய உள்ளடக்கமானது ஏப்ரல் 22, 2010 தேதிக்குப் பிறகு Quora தளத்தில் சேர்க்கப்பட்டது; (b) உள்ளடக்கத்தை உருவாக்கிய பயனர் Quora தளத்தில் உள்ளடக்கத்தை நகலெடுக்க அல்ல என வெளிப்படையாக குறிப்பிடவில்லை; (c) நீங்கள் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏதும் செய்யவில்லை; (d) எங்கள் உள்ளடக்கத்தையும் பொருட்களையும் உள்ளடக்கிய ஒவ்வொரு பக்கத்திலும் http://quora.com-இலுள்ள உள்ளடக்கத்தின் மூல ஆதாரத்தைக் காண்பிக்கும் பக்கத்தை இணைத்து Quora-வை படிக்கத்தகுந்த உரையாகவும், மனிதன் மற்றும் இயந்திரம் பின்தொடரக்கூடிய இணைப்பாகவும் (ஒரு HTML <a> anchor tag) தொடர்புபடுத்துகிறீர்கள்;(e) Quora அல்லது ஒரு பயனரின் வேண்டுகோளின் பேரில், பின்னர் பெயர் வெளியிட விரும்பாத நிலையில் செய்யப்பட்ட உள்ளடக்கத்தில் இருந்து பயனரின் பெயரை நீக்குகிறீர்கள்; (f) Quora அல்லது உள்ளடக்கத்திற்கு பங்களித்த ஒரு பயனரின் வேண்டுகோளின் பெயரில், Quora தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட அல்லது மறுபயன்பாட்டுக்கானது அல்ல என்று குறியிடப்பட்ட உள்ளடக்கத்தை நீக்குவதற்கான நியாமான முயற்சியைச் செய்கிறீர்கள்; மற்றும் (h) எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்களின் ஒரு சிறிய பகுதியைத் தவிர அதிகமாக நீங்கள் மறுவெளியீட்டைச் செய்யவில்லை. இந்த உரிமைகளைச் செயல்படுத்துவதில், எங்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான தனிப்பட்ட முன் அனுமதி இல்லாமல், Quora அல்லது எந்த Quora பயனருடன் எந்தத் தொடர்பையோ அல்லது நிதியுதவியையோ அல்லது ஒப்புதலையோ வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ நீங்கள் வலியுறுத்தமாட்டீர்கள்.
   3. உங்களுக்கான எங்கள் உரிமத்தை நாங்கள் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தலாம். Quora தளத்தில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் விநியோகிக்க அல்லது உள்ளடக்கத்தை அகற்ற மறுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. ஆனால் அது எங்களின் கடமைபொறுப்பல்ல. இந்த வகையில் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் உரிமங்களைத் தவிர, மற்ற எல்லா உரிமைகளையும் நாங்கள் தக்கவைக்கிறோம் மற்றும் வேறு உரிமைகள் அல்லது உரிமங்களை, மறைமுகமாக அல்லது வேறுவிதமாக வழங்குவதில்லை.
  4. அனுமதிக்கப்பட்ட பயன்பாடுகள். நீங்கள் ஒரு தேடுபொறி, வெப் கிராலர் (web crawler), இயலி (bot), ஸ்கிராப்பிங் டூல் (scraping tool), டேட்டா மைனிங் டூல் (data mining tool), பல்க் டவுன்லோடிங் டூல் (bulk downloading tool), wget பயன்பாடு அல்லது ஒத்த தரவுச் சேகரிப்பு அல்லது பிரித்தெடுப்புக் கருவியை இயக்கினால், பின்வரும் கூடுதல் விதிகளுக்கு உட்பட்டு Quora தளத்தை நீங்கள் அணுகலாம்: i) நீங்கள் ஒரு விரிவான பயனர் முகவர் தலைப்பைப் பயன்படுத்த வேண்டும்; ii) அனைத்து நேரங்களிலும் robots.txt ஐ நீங்கள் பின்தொடர வேண்டும்; iii) உங்கள் அணுகல் Quora தளத்தின் செயல்பாட்டின் எந்தவொரு அம்சத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கக்கூடாது; மற்றும் iv) உங்கள் பயனர் முகவர் சரத்திலோ அல்லது உங்களுக்கு இணையதளம் ஒன்றிருந்தால் அதிலோ, உங்களை எப்படித் தொடர்புகொள்வது என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
  5. ஒப்புதல் அல்லது சரிபார்ப்பு இல்லை. மூன்றாம் தரப்பு உள்ளடக்கம், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை Quora தளம் கொண்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். மேலும் இது மூன்றாம் தரப்பினருடனான தொடர்பாடல்களை வழங்குகிறது. Quora தளத்தில் பங்கேற்பு அல்லது இருப்பானது, எங்களுடைய ஒப்புதல் அல்லது சரிபார்ப்பிற்கு வழிவகுக்காது. Quora தளத்தில் எவராலும் பதிவிடப்பட்ட எந்த உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமைத்தன்மை அல்லது குறித்த காலந்தவறாமை பற்றிய எந்த உத்தரவாதங்களையும் பிரதிநிதித்துவங்களையும் நாங்கள் வழங்கவில்லை
  6. உடைமை உரிமை. எங்கள் உள்ளடக்கமும், பொருட்களும் Quora பயனர்கள் அல்லது Quora-வின் சொத்தாக இருப்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள். உள்ளடக்கம், தகவல் மற்றும் சேவைகள் ஆகியவை அமெரிக்க மற்றும் சர்வதேச பதிப்புரிமை, வர்த்தக முத்திரை மற்றும் பிற சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இந்த உரிமைகள் செல்லுபடியாகக்கூடியவை மற்றும் செயல்படுத்தக்கூடியவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்
 5. ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்
  சமூக வலையமைப்பு சேவை போன்ற மற்றொரு நிகழ்நிலை சேவை வழங்குநரை ("ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்"), Quora தளத்தில் உங்கள் கணக்கில் நேரடியாக ஒருங்கிணைக்க நீங்கள் செயல்படுத்தலாம். ஓர் ஒருங்கிணைந்த சேவையைச் செயல்படுத்துவதன் மூலம், ஒருங்கிணைந்த சேவை வழங்குநரிடமிருந்து உங்கள் உள்நுழைவுத் தகவல் மற்றும் பிற பயனர் தரவுகளை நாங்கள் அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறீர்கள். Quora-வின் பயன்பாடு, சேமிப்பகம் மற்றும் உங்கள் தொடர்பான தகவலின் வெளியீடு மற்றும் Quora-விற்குளான ஒருங்கிணைந்த சேவைகளின் உங்களின் பயன்பாடு ஆகியவை பற்றி மேலும் அறிய, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும். எந்தவொரு ஒருங்கிணைந்த சேவை வழங்குநரை நீங்கள் பயன்படுத்துவதும், உங்கள் தரவு மற்றும் தகவல்களின் அவர்களின் சொந்தக் கையாளுதலும், அவர்களின் தனியுரிமைக் கொள்கை மற்றும் பிற கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 6. Quora தளத்தில் சில வழங்கல்கள் பற்றி மேலும் தகவல்
  1. தொகுப்புகள். நீங்கள் Quora தளத்தில் பதிவு செய்யும்போது, உங்களுக்கு ஆர்வம் தரக்கூடிய கேள்விகள் மற்றும் பதில்கள் தொகுப்பினை நீங்கள் பெறுவதை சேவை உள்ளடக்குகிறது. எங்கள் தனியுரிமைக் கொள்கையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் கணக்குச் சுயவிவரத்தில் இருக்கக்கூடிய "மின்னஞ்சல் மற்றும் அறிவிப்பு" அமைப்புகளுக்குச் செல்வதன் மூலம், தொகுப்பினை பெறுதலில் இருந்து நீங்கள் விலகலாம் மற்றும் பிற தகவல்தொடர்பு அமைப்புகளை சரிசெய்யலாம்.
  2. விளம்பரங்கள். Quora தளம் விளம்பரங்களை உள்ளடக்கியிருக்கலாம். அவை Quora தளத்திலுள்ள உள்ளடக்கம் அல்லது தகவலை, Quora தளத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகள் அல்லது உங்களுக்கு அவற்றை ஏற்றதாகச் செய்யும் முயற்சியில் பிற தகவலை இலக்காகக் கொண்டிருக்கலாம். Quora-வின் மூலமான விளம்பரப்படுத்தலின் வகைகள் மற்றும் அளவு மாற்றங்களுக்கு உட்பட்டவை. Quora தளத்தை அணுகுவதற்கும், பயன்படுத்துவதற்கும் Quora உங்களை அனுமதிப்பதைக் கருத்தில் கொண்டு, Quora மற்றும் அதன் மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் மற்றும் கூட்டாளர்கள் ஆகியோர் அதுபோன்ற விளம்பரங்களை Quora தளத்தில் செய்யலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு விளம்பரதாரராக விரும்பினால், Quora தளத்தின் விளம்பர சேவைகளை வழங்குவதைப் பற்றி எங்களுடனான ஒரு தனிப்பட்ட மற்றும் துணை விதிமுறைகளுக்குள் நீங்கள் நுழைய வேண்டும்.
  3. சட்ட, மருத்துவம் மற்றும் இதர தொழில்முறை பங்களிப்பாளர்கள். உள்ளடக்கத்தை பதிவிடுகின்ற சில பயனர்கள் சட்ட, மருத்துவ மற்றும் பிற உரிமம் பெற்ற தொழில்களின் உறுப்பினர்களாக (கூட்டாக, "தொழில்முறை பங்களிப்பாளர்கள்") உள்ளனர். தொழில்முறை பங்களிப்பாளர்களால் பதிவிடப்படும் உள்ளடக்கத்தை, உங்களின் குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருத்தமான ஒரு நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாக கருதக்கூடாது. தொழில்முறை பங்களிப்பாளர்கள் திருத்துவதற்கும் மற்றும் தங்களின் பதில்களில் இணைத்துக் கொள்வதற்குமான சில பொறுப்புத்துறப்பு வார்ப்புருமொழியை Quora வழங்கியுள்ளது. நெறிமுறை விதிகள் மாநிலம் அல்லது இடத்தைச் சார்ந்து வேறுபடுகின்றன. தங்களுடைய தொழிற்துறைக்கும், வழங்கப்பட்ட உள்ளடக்கத்திற்கும் பொருத்தமான பொறுப்புத்துறப்புகளை நிர்ணயித்து வழங்குவது தொழில்முறை பங்களிப்பாளர்களின் பொறுப்பு.
  4. பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் விட்ஜெட்டுகள். பின்வரும் நிபந்தனைகளின் பேரில் இந்த சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டு Quora-வின் பொத்தான்கள், இணைப்புகள், விட்ஜெட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு அனுமதி உள்ளது (பொறுப்புத்துறப்புகள் மற்றும் பொறுப்பு வரையறைகள் உட்பட): (a) இத்தகைய பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் விட்ஜெட்கள் ஆகியவற்றின் உங்கள் பயன்பாடு Quora தளத்துடன் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது; (b) அத்தகைய பொத்தான்கள், இணைப்புகள், விட்ஜெட்டுகள் அல்லது தொடர்புடைய குறியீட்டை எந்த விதத்திலும் மாற்றமாட்டீர்கள்; (c) அத்தகைய பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் விட்ஜெட்டுகள் பயன்படுத்தப்படும் இணையதளத்திற்கு Quora ஒப்புதல் அளிக்கிறது, விளம்பரப்படுத்துகிறது அல்லது பரிந்துரைக்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் அத்தகைய பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் பரிந்துரைகளை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள்; மற்றும் (d) இத்தகைய பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் விட்ஜெட்கள், மற்றும் அத்தகைய பொத்தான்கள், இணைப்புகள் மற்றும் விட்ஜெட்களைப் பயன்படுத்தும் இணையதளம் ஆகியவை Quora -வின் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கையை மீறுவதில்லை.
  5. இணைய வளங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவைகள். பிற இணையதளங்களுக்கான இணைப்புகளைப் பார்வையிடும் அல்லது மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள் அல்லது சேவைகளுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் Quora தளம் உங்களுக்கு வழங்கலாம். இத்தகைய இணையதளங்கள் அல்லது வளங்களைப் பயன்படுத்துவதில் இருந்து எழும் அனைத்து அபாயத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
  6. தனிப்பட்ட ஒப்பந்தம் தேவைப்படும் சேவைகள் சில குறிப்பிட்ட அம்சங்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு தனிப்பட்ட மற்றும் துணை எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தினுள் நீங்கள் நுழையத் தேவையிருக்கலாம்.
 7. உங்கள் அறிவுசார் சொத்துரிமை, Quora கொள்கைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்கள் மீறல் குறித்து புகாரளித்தல் உங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறல்கள் அல்லது பிற Quora கொள்கைகளின் மீறல்கள் அல்லது பொருந்தக்கூடிய சட்டமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ஒரு சிறப்புச் செயல்முறையை நாங்கள் கொண்டுள்ளோம்.
  1. பதிப்புரிமைக் கொள்கை மற்றும் வர்த்தக முத்திரைக் கொள்கை. நாங்கள் ஒரு பதிப்புரிமைக் கொள்கை மற்றும் வர்த்தக முத்திரைக் கொள்கையை ஏற்று செயல்படுத்தியுள்ளோம். Quora தளத்தில் உள்ள உள்ளடக்கம் உங்கள் அறிவுசார் சொத்துரிமையை மீறுவதாக நீங்கள் நம்பினால், அவமதிப்பிற்காக கோரிக்கையை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான தகவலுடன் சேர்த்து மேலும் தகவல்களுக்கு, எங்களின் பதிப்புரிமைக் கொள்கை மற்றும் வர்த்தக முத்திரைக் கொள்கையைப் படிக்கவும். உங்கள் வசதிக்காக பின்வருவனவற்றை நாங்கள் வழங்குகிறோம் பதிப்புரிமை மீறல் கோருதல் படிவம் மற்றும் வர்த்தக முத்திரை மீறல் கோருதல் படிவம். விரைவான செயல்முறைக்காக, இவற்றை நீங்கள் பொருந்தும்படி பயன்படுத்த வேண்டும்.
  2. பிற மீறல்களின் அறிக்கைகள். Quora தளத்தின் உள்ளடக்கம் Quora-வின் ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கையை மீறுகிறது அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை (பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரை மீறல்கள் தவிர) அல்லது வேறு Quora கொள்கைகளை மீறுவதாக நீங்கள் நம்பினால், இதனை நீங்கள் சமர்ப்பிக்கலாம்: பிற மீறல் உரிமைகோரல் படிவம். தனிப்பட்ட முறையில் மறுக்கக்கூடிய அல்லது புண்படுத்தக்கூடிய வகையிலுள்ளது என்று நீங்கள் அறிகின்ற உள்ளடக்கத்தை நீக்குவதில் எங்களுக்கு மறுப்பு இல்லை. எங்கள் கொள்கை மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, உள்ளடக்க அகற்றத்திற்கான கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்
 8. பொறுப்பின் வரம்பு மற்றும் துறப்புகள் இந்த பிரிவை நீங்கள் கவனமாகப் படிக்கவும். ஏனெனில் இது உங்களுக்கான QUORA நிறுவனங்களின் பொறுப்புகளை வரையறைப்படுத்துகிறது.

  "QUORA நிறுவனங்கள்" என்றால், "QUORA INC., மற்றும் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள், தொடர்புடைய நிறுவனங்கள்,வழங்குநர்கள் , உரிமதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகள், இயக்குனர்கள், ஊழியர்கள், முகவர்கள் மற்றும் அவை ஒன்றொன்றின் பிரதிநிதிகள் என்று அர்த்தம். கீழுள்ள ஒவ்வொரு ஏற்பாடும் பொருந்திய விதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்குப் பொருந்தும்.
  1. வெளிப்படையாக அல்லது மறைமுகமாக, "அப்படியே" மற்றும் "இருக்கும்படியே" அடிப்படையில், உங்களுக்கு நாங்கள் Quora தளத்துடன் எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்களையும் மற்றும் பிறருடன் இணையும் வாய்ப்பையும் வழங்குகிறோம். மேற்குறிப்பிடப்படுள்ளதை வரையறுக்காமல், வணிக நோக்கத்திற்காக, உரிமை, துல்லியத்தன்மை மற்றும் முழுமைத்தன்மை, தடையற்ற அல்லது பிழையில்லாச் சேவை, குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொருந்துதல், தொந்தரவில்லா அனுபவம், மீறலற்ற மற்றும் கையாள்வதில் அல்லது வர்த்தக பயன்பாடுகளில் இருந்து எழும் அனைத்து உத்தரவாதங்கள் ஆகியவற்றின் எந்தவொரு உத்தரவாதங்கள் மற்றும் நிபந்தனைகளையும் QUORA நிறுவனங்கள் வெளிப்படையாக மறுக்கின்றன.
  2. Quora பின்வருவன தொடர்பாக எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை, மற்றும் அவற்றிற்கான அனைத்து பொறுப்புகளையும் வெளிப்படையாக மறுக்கிறது: (i) எந்தவொரு பயனர் மற்றும் மூன்றாம் தரப்பினரால் பதிவிடப்பட்ட உள்ளடக்கம்; (ii) ஒருகிணைந்த சேவை வழங்குனர் அல்லது தொழில்முறை பங்களிப்பாளர் உள்பட Quora தளத்தின் மூலம் அல்லது அங்கு பட்டியலிடப்பட்ட நீங்கள் அணுகக்கூடிய எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் இணையதளம், மூன்றாம் தரப்பினரின் தயாரிப்பு அல்லது மூன்றாம் தரப்பினரின் சேவை (iii) உங்களின் Quora தளப் பயன்பாடு தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும் மூன்றாம் தரப்பினரின் தரம் அல்லது நடத்தை; அல்லது (iv) உங்கள் உள்ளடக்கத்தின் அங்கீகாரமற்ற அணுகல், பயன்பாடு அல்லது மாற்றம். Quora பின்வரும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை: (a) Quora தளம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்; (b) Quora தளம் தடங்கலற்று, சமயத்திற்கேற்றவாறு, பாதுகாப்பாக மற்றும் பிழையற்று இருக்கும்; (c) Quora தளத்தின் பயன்பாட்டிலிருந்து, ஒரு தொழில்முறை பங்களிப்பாளரிடம் இருந்து அல்லது வேறு எந்தப் பயனரிடம் இருந்து நீங்கள் பெறக்கூடிய முடிவுகள் அல்லது தகவல், துல்லியமாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருக்கும்; அல்லது (d) Quora தளத்தின் மூலம் நீங்கள் பெறும் அல்லது கொள்முதல் செய்யும் தயாரிப்புகள், சேவைகள், தகவல் அல்லது பிற பொருட்கள் திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும்.
  3. பொறுப்பு சார்ந்த எந்தவொரு கோட்பாட்டின் கீழும் QUORA நிறுவனங்கள் உங்களுக்குப் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை சட்டம் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவுக்கு நீங்கள் ஏற்கிறீர்கள். மேலே குறிப்பிட்டதை வரையறுக்காமல், சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்படும் அதிகபட்ச அளவுக்கு, மறைமுகமான, தற்செயலான, ஒன்றன் விளைவாக நிகழ்கிற, சிறப்பு அல்லது தனிச்சிறப்புச்சேதங்கள், லாபங்களின் இழப்பு, வர்த்தக இடையூறு, புகழுக்குத் தீங்கு அல்லது தரவு இழப்பு ஆகியவற்றின் (இந்தச் சேதங்களின் சாத்தியக்கூறு குறித்து நமக்கு அறிவுறுத்தப்பட்டு அல்லது அத்தகைய சேதம் எதிர்பார்க்கப்பட்டால் கூட) மூலம் எழும் அல்லது Quora தளத்தின் உங்களுடைய பயன்பாடு, அல்லது பயன்படுத்த இயலாமை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவற்றிற்கு QUORA நிறுவனங்கள் பொறுப்பல்ல.
  4. Quora தளத்தின் மீதான உங்களின் திருப்தியின்மைக்கு ஒரே தீர்வு, Quora தளத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்துவதுதான்.
  5. மேற்குறிப்பிட்டவற்றை வரையறுக்காமல், Quora தளத்துடன் அல்லது இந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய உங்கள் இழப்புக்கள் அல்லது சேதத்திற்கான QUORA-வின் அதிகபட்ச மதிப்பீட்டுப் பொறுப்பானது, பொறுப்பை ஏற்படுத்தும் செயலுக்கு பன்னிரெண்டு (12) மாதங்களுக்கு முன் Quora தளம் தொடர்பாக Quora-விற்கு செலுத்தப்பட்டத் தொகைக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
  6. சில வகையான சேதங்களுக்கு, குறிப்பிட்ட உத்தரவாதங்கள் அல்லது பொறுப்பை விலக்குதலின் மீதான வரம்புகளை சில அதிகார ஆட்சி எல்லைகள் அனுமதிப்பதில்லை. இதன் விளைவாக, மேலே உள்ள வரம்புகள் அல்லது விலக்கல்கள் உங்களுக்கு முழுதாகவோ அல்லது பகுதியாகவோ பொருந்தாது மற்றும் மேற்குறிப்பிட்ட பிரிவுகள் 8(c), 8(d), மற்றும் 8(e) நியூஜெர்சியில் வசிப்பவருக்கு, QUORA-வின் கவனகக்குறைவு, மோசடி, பொறுப்பற்றதன்மை அல்லது உள்நோக்கத்துடன் தவறாக நடந்து கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் சேதங்களுக்குப் பொருந்தாது.
 9. இழப்பீடு செய்தல்

  பின்வருவதில் இருந்து எழும் அல்லது அவற்றுடன் தொடர்புகொண்ட அனைத்து மூன்றாம் தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் செலவிலிருந்து (நியாயமான வழக்கறிஞர்கள் கட்டணம் உட்பட) Quora நிறுவனங்களை விடுவிப்பதற்கும், இழப்பீடு செய்யவும், பாதுகாப்பதற்கும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்: i) Quora தளத்தின் உங்களுடைய பயன்பாடு, ii) உங்கள் உள்ளடக்கம், iii) உங்கள் நடத்தை அல்லது Quora தளத்தின் மற்ற பயனர்களுடன் தொடர்பாடல் செய்தல், அல்லது iv) இந்த ஒப்பந்தத்தின் எந்த ஒரு பகுதியின் உங்கள் மீறல். அத்தகைய உரிமைக் கோரலை நாங்கள் உடனடியாக உங்களுக்குத் தெரிவிப்போம் மற்றும் அந்தக் கோரிக்கைக்கு நீங்கள் வாதாட (உங்கள் செலவில்) நியாயமான உதவியை வழங்குவோம். நீங்கள் எங்களை அந்த வாதாடலில் பங்கேற்க அனுமதிப்பீர்கள் மற்றும் முன்கூட்டிய எழுத்துப்பூர்வ ஒப்புதலின்றி அத்தகைய கோருதலைத் தீர்க்கமாட்டீர்கள். உங்களின் மூலம் இழப்பீடு செய்வதற்கு உட்படாத எந்த விஷயத்தையும் எங்கள் சொந்த செலவில் பிரத்யேக பாதுகாப்பு பொறுப்பேற்பதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது. அந்த நிகழ்வில், அந்த விஷயத்தில் எங்களை மேலும் பாதுகாக்க நீங்கள் கடமைப்பட்டிருக்க மாட்டீர்கள்.
 10. சர்ச்சைத் தீர்வு

  உங்கள் மாநிலம் அல்லது குடியிருக்கும் நாட்டின் சட்ட விதிமுறைகளுடனான முரண்பாடு அல்லது பயன்பாட்டைச் சாராமல், இந்த ஒப்பந்தம் மற்றும் Quora தளத்தின் உங்கள் பயன்பாட்டிலிருந்து எழும் எந்த நடவடிக்கையும் கலிஃபோர்னியா மாநில சட்டங்களின் விதிமுறைகளால், நிர்வகிக்கப்படும். பின்வரும் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இசைவுத் தீர்ப்புமுறைக்கு (arbitration) சமர்ப்பிக்கப்பட்டால் தவிர, Quora தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக எழும் அனைத்து உரிமைகோரல்கள், சட்ட நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் கலிஃபோர்னியா, சான்டா கிளாரா கவுன்டியில் கொண்டுவரப்படும். மேலும் நீங்கள் அத்தகைய நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் சங்கடமான மன்றத்திற்கு எந்தவொரு மறுப்பையும்தெரிவிக்கவில்லை.

  $10,000 அமெரிக்க டாலருக்கு குறைவாகக் கோரப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழான எந்தவொரு கோருதலுக்கும் (தடை உத்தரவு அல்லது சமமான நிவாரணத்திற்கான கோருதல்களைத் தவிர) நிவாரணத்தைக் கோருகின்ற தரப்பு, சர்ச்சையைத் தீர்க்க பிணைக்கப்பட்ட ஆளில்லா நிலை அடிப்படையில் இசைவுத் தீர்ப்புமுறையைத் தேர்ந்தெடுக்கலாம். அத்தகைய இசைவுத் தீர்ப்புமுறையைத் தேர்ந்தெடுக்கும் தரப்பு ஒரு நிறுவப்பட்ட மாற்று சர்ச்சை தீர்வு ("ADR") வழங்குநரின் மூலம் இணக்கமானஒப்புதல் அளிப்பதன் மூலம் இசைவுத் தீர்ப்புமுறையை தொடங்கும். ADR வழங்குநரும் அனைத்து தரப்பினரும் கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும்: a) இசைவுத் தீர்ப்பானது தொலைபேசி, இணையம் மூலம் நடத்தப்படும் மற்றும்/அல்லது முற்றிலும் இசைவுத் தீர்ப்புமுறையைத் தொடங்கும் தரப்பினரின் எழுத்துவடிவ சமர்ப்பித்தல்களின் அடிப்படையில் இருக்கும்; b) இசைவுத் தீர்ப்புமுறை தரப்பினரின் இணக்கமானஒப்புதல் இருந்தாலன்றி தரப்பினரின் அல்லது சாட்சிகள் ஆஜராவதை ஈடுபடுத்தாது; மற்றும் c) நடுவர் வழங்கிய விருதான எந்தவொரு தீர்ப்பும் தகுதிவாய்ந்த அதிகார எல்லையின் எந்த நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்படலாம்
 11. பொது விதிமுறைகள்
  1. இந்த விதிமுறைகளுக்கான மாற்றங்கள். இந்த ஒப்பந்தத்தை (தனியுரிமை கொள்கை, ஏற்கத்தக்கப் பயன்பாட்டு கொள்கை, பதிப்புரிமைக் கொள்கை, மற்றும் வர்த்தக முத்திரைக் கொள்கை போன்ற இந்த ஒப்பந்தத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள உள்ளிட்ட எந்தக் கொள்கையும்) எந்த நேரத்திலும், எங்கள் சொந்த விருப்பப்படி நாங்கள் திருத்தலாம். இந்த ஒப்பந்தத்தின் பொருள் விதிகளை நாங்கள் திருத்தினால், திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் உங்களுக்கு அனுப்பிய பின் அத்தகைய திருத்தம் செயலுக்கு வரும். இத்தகைய அறிவிப்பு எங்கள் தனிப்பட்ட விருப்பப்படி இருக்கும் மற்றும் அறிவிப்பு முறையானது, உதாரணமாக, மின்னஞ்சல் வழியாக, Quora தளத்தில் பதிவிடப்பட்ட அறிவிப்பு அல்லது பிற முறைகளை உள்ளடக்கலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தையும் எங்கள் முக்கியக் கொள்கைகளையும் இங்கு பார்க்கலாம். திருத்தத்தின் அறிவிப்பைப் பெற்றபின், உங்கள் கணக்கை நீங்கள் ரத்து செய்யவில்லை அல்லது Quora தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தவில்லையெனில், திருத்தப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஒப்புக்கொண்டதாக அமையும். திருத்தங்கள் அல்லது இந்த ஒப்பந்தத்தின் எந்த விதிமுறைகளுக்கும் நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், உங்களது ஒரே தீர்வு உங்கள் கணக்கை நீக்கம்செய்வது அல்லது Quora தளத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாகும்.
  2. ஆளும் சட்டம் மற்றும் அதிகார எல்லை. அமெரிக்காவில் Quora செயல்பட்டு வருவதையும், கலிஃபோர்னியாவை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அதிகார பகுப்பாய்வு நோக்கங்களுக்காக ஒரு செயலற்ற சேவை என்று ஒப்புக்கொள்கிறீர்கள். இசைவுத் தீர்ப்புமுறை பொருந்தாத எந்தவொரு கோருதலுக்கும், சட்ட விதிமுறைகளின் எந்த முரண்பாடும் இல்லாமல் கலிஃபோர்னியா, சாண்டா கிளாரா கவுண்டியில் இத்தகைய கோருதல்கள் கூட்டாட்சி அல்லது மாநில நீதிமன்றத்தில் கொண்டு வரப்படும் மற்றும் கலிஃபோர்னியா மற்றும் மத்திய சட்டத்தின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள்.
  3. அமெரிக்காவில் வெளியேயான பயன்பாடு. அமெரிக்காவிற்கு வெளியே உள்ள எல்லா சட்டங்களையும் விதிமுறைகளையும் Quora தளம் பூர்த்தி செய்யும் என்ற எந்தவொரு பிரதிநிதித்துவத்தையோ உத்தரவாதத்தையோ Quora வெளிப்படையாக மறுக்கின்றது. நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியில் Quora தளத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் Quora தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பொருந்தக்கூடிய வெவ்வேறு சட்டங்கள், விதிமுறைகள் அல்லது சுங்க இணக்கத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டு ஏற்கிறீர்கள்.
  4. ஏற்றுமதி. கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க அலுவலகங்களில் இருந்து Quora தளமானது கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. Quora மென்பொருள், அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. பொருந்தக்கூடிய எந்தவொரு சட்டங்கள் அல்லது விதிமுறைகளை மீறி, Quora-வுக்கான எந்தவொரு மென்பொருளும் பதிவிறக்கம் அல்லது மறு ஏற்றுமதி செய்யப்படாது. (1) அமெரிக்க அரசாங்கத் தடைக்கு உட்பட்டுள்ள ஒரு நாட்டில் அல்லது அமெரிக்க அரசாங்கத்தால் "பயங்கரவாத ஆதரவாளர்கள்" என நியமிக்கப்பட்ட நாட்டில் இல்லை, (2) அமெரிக்க அரசாங்க பட்டியலில் தடைசெய்யப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட தரப்புகளில் இல்லை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
  5. செயலிகள் மற்றும் மொபைல் சாதனங்கள். Quora செயலியின் மூலம் Quora தளத்தை நீங்கள் அணுகினால், இந்த ஒப்பந்தம் உங்களுக்கும் Quora-வுக்கும் இடையில் மட்டுமேயானதே தவிர, தங்களின் சொந்த விதிமுறையின் கீழ் உங்களுக்கு செயலியை வழங்கக்கூடிய மற்றொரு செயலி சேவை வழங்குநருடன் அல்லது செயலி தள வழங்குநருடனானது (Apple Inc அல்லது Google Inc போன்றவை) அல்ல. மொபைல் சாதனத்தின் மூலமாக Quora தளத்தை அணுகும் வரை, உங்கள் உங்கள் வயர்லெஸ் கேரியரின் வழக்கமான கட்டணங்கள், தரவுக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் பொருந்தலாம்.
  6. தக்கவைத்தல். பின்வரும் ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் காலாவதி அல்லது முடிவைத் தக்கவைக்கும்: பிரிவு 2e(முடிவு), 2(g)(பின்னூட்டம்), பிரிவு 3(உங்கள் உள்ளடக்கம்), பிரிவு4(a)-(b) மற்றும் (d)-(f) (எங்கள் உள்ளடக்கம் மற்றும் பொருட்கள்), பிரிவு 8(பொறுப்பின் வரம்பு மற்றும் துறப்புகள்), பிரிவு 9(இழப்பீடு செய்தல்), பிரிவுகள் 10(சர்ச்சைத் தீர்வு) மற்றும் பிரிவு 11(பொது விதிமுறைகள்).
  7. கலிஃபோர்னியா பயனர்களுக்கான அறிவிப்பு. கலிஃபோர்னியா சிவில் குறியீட்டுப் பிரிவு 1789.3-இன் கீழ், கலிஃபோர்னியா இணையப் பயனர்கள் பின்வரும் குறிப்பிட்ட நுகர்வோர் உரிமை அறிவிப்புக்கு தகுதியுடையவர்கள்: Quora தளம், கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்ட் வியூவில் உள்ள Quora, Inc. மூலம் வழங்கப்படுகிறது. Quora தளம் தொடர்பாக உங்களுக்கு கேள்வி அல்லது புகார் இருந்தால், feedback-tamil@quora.com என்ற மின்னஞ்சலில் Quora -வைத் தொடர்பு கொள்ளவும். கலிஃபோர்னியாவில் வசிப்பவர்கள் நுகர்வோர் விவகாரங்கள் நுகர்வோர் தகவல் பிரிவு துறையினரை 1625 N Market Blvd., Suite S-202, Sacramento, California 95834 என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி வழியாக (916) 445-1254 அல்லது (800) 952-5210 என்ற எண்ணிலோ அல்லது காது கேளாதோர் TDD (800) 326-2297 அல்லது TDD (916) 322-1700 என்பதிலோ தொடர்பு கொள்ளலாம்.
  8. அரசாங்க இறுதிப் பயனர்கள். எந்தவொரு Quora மென்பொருள் மற்றும் தொடர்புடைய ஆவணப்படுத்தலானது, 45 C.F.R- இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி "வணிகப் பொருட்கள்" ஆகும். 48 C.F.R- இல் பயன்படுத்தப்பட்டுள்ள "வணிகக் கணினி மென்பொருள்" மற்றும் "வணிகக் கணினி மென்பொருள் ஆவணமாக்கல்" போன்ற அதே சொற்கூறுகளை §2.101 உள்ளடக்கியுள்ளது. §12.212 அல்லது 48 C.F.R. §227.7202 (பொருந்தும் வகையில்). 48 C.F.R.-உடன் ஒத்த. §12.212 அல்லது 48 C.F.R. §227.7202-1லிருந்து 227.7202-4 வரை (பொருந்தும் வகையில்), அமெரிக்க அரசாங்கத்தின் இறுதி பயனர்களுக்கு வணிகக் கணினி மென்பொருள் மற்றும் வணிகக் கணினி மென்பொருள் ஆவணமாக்கல் உரிமங்கள் வழங்கப்படுகின்றன: (i) வணிகரீதியான உருப்படிகளாக மட்டும்; மற்றும் (ii) இந்த ஒப்பந்தத்திற்கு இணங்க அனைத்து இறுதி பயனர்களுக்கும் வழங்கப்படும் உரிமைகளுடன் மட்டும்.
  9. ஒதுக்கீடு. இந்த ஒப்பந்தத்தை (அல்லது இந்த ஒப்பந்தத்தின் கீழ் உங்கள் உரிமைகள் அல்லது கடமைகளில் ஏதேனும்) எழுத்துப்பூர்வ முன் ஒப்புதல் இல்லாமல் உங்களால் ஒதுக்கவோ, பரிமாற்றவோ முடியாது; மேற்கூறியதோடு உடன்படாத எந்த ஒதுக்கீடு அல்லது பரிமாற்ற முயற்சியும் செல்லாது. நாங்கள் இந்த ஒப்பந்தத்தை கட்டுப்பாடின்றி ஒதுக்கீடு செய்யவோ அல்லது பரிமாற்றவோ செய்வோம். இந்த ஒப்பந்தம், தரப்பினர் மற்றும் அவர்களது சட்டப் பிரதிநிதிகள், வாரிசுகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்படுபவர்களின் நன்மைக்கானது மற்றும் பிணைக்கப்பட்டுள்ளது
  10. மின்னணு தகவல்தொடர்பு. இந்த ஒப்பந்தம் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, மின்னஞ்சல் மூலம் எங்களிடம் இருந்து தகவல்தொடர்புகளைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு மின்னணு வழியாக வழங்கும் எல்லா ஒப்பந்தங்களும், அறிவிப்புகளும், வெளிப்படுத்தல்களும் மற்றும் பிற தகவல்தொடர்புகளும், அத்தகைய தகவல்தொடர்புகள் எழுத்துப்பூர்வமாக இருப்பதன் எந்த சட்டபூர்வமான தேவையும் பூர்த்தி செய்யும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள்.
  11. முழு ஒப்பந்தம்/பிரிக்கத்தக்கது. Quora தளம் தொடர்பாக முன்கூறிய அனைத்து, விதிமுறைகள், ஒப்பந்தங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் எழுதுதல்களை (இந்த ஒப்பந்தத்துடன் கூடுதலாக, தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தேவைப்படும் சேவைகள் தவிர) இந்த ஒப்பந்தம் மாற்றீடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் எந்த விதியாவது செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால், ஒப்பந்தத்தின் மீதமுள்ள விதிகள் முழு சக்தியுடனும் வீச்சுடனும் நடைமுறைப்படுத்தப்படுவதை அந்த விதி பாதிக்காது.
  12. பொருள் விளக்கம். இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் அல்லது பொருள் விளக்கம் தருவதில்: (i) இந்த ஒப்பந்தத்தில் உள்ள தலைப்புகள் வசதிக்காக மட்டுமே. மேலும் அவை பரிசீலிக்கப்பட வேண்டியவை அல்ல, மற்றும் (ii) இந்த ஒப்பந்தத்தை வரைவு செய்வதில் அதன் ஆலோசனையின் பங்களிப்பின் விளைவாக எந்தவொரு தரப்புக்கு ஆதரவாகவும் செயல்படுவதற்கான எந்த அனுமானமும் செய்யப்படவில்லை.
  13. அறிவிப்புகள். வேறுவிதமாக குறிப்பிடப்பட்டாலொழிய, இந்த ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அல்லது தேவையான எல்லா அறிவிப்புகளும் செல்லுபடியாகும் பொருட்டு பின்வருமாறு எழுதி அனுப்பப்பட வேண்டும்: (i) எங்களிடமிருந்து உங்களுக்கென்றால், உங்கள் கணக்குடன் தொடர்புள்ள முகவரிக்கு மின்னஞ்சல் வழியாக, மற்றும் (ii) உங்களிடமிருந்து எங்களுக்கென்றால் Legal@Quora.com வழியாக. (a) எங்களிடமிருந்து உங்களுக்கென்றால், மின்னஞ்சல் செய்யப்பட்ட பின்பு, மற்றும் (b) உங்களிடமிருந்து எங்களுக்கென்றால், நாங்கள் பெற்ற பின்பு, அறிவிப்புகள் கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும்.
  14. உறவுமுறை. இந்த ஒப்பந்தம் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு கூட்டு முயற்சி, முகமை, கூட்டாண்மை அல்லது கூட்டு நிறுவனத்தை உருவாக்காது. வெளிப்படையாக இங்கு வழங்கப்பட்டவற்றைத் தவிர, மற்றவர்களின் சார்பாக வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு உரிமை, சக்தி, எந்தவித பொறுப்பு அல்லது கடமையை உருவாக்குவதற்கான அதிகாரம் எந்தவொரு தரப்புக்கும் கிடையாது.
  15. தள்ளுபடி. எந்தவொரு விதிமுறையையும் தள்ளுபடி செய்வது என்பது, அந்த விதிமுறையின் அல்லது வேறு எந்த விதிமுறையின் மேலதிக அல்லது தொடர்ச்சியான தள்ளுபடியாகக் கருதப்படாது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒரு உரிமை அல்லது விதியை வலியுறுத்துவதிலான எங்களின் தோல்வி, அத்தகைய உரிமை அல்லது விதியின் ஒரு விலக்கு அல்ல.
  16. மேலும் உறுதிப்பாடுகள். இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தையும் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் கீழான உங்களின் எந்த உரிமைகள் அல்லது கடப்பாடுகளை உறுதிபடுத்தவும் செயல்படுத்தவும் நாங்கள் கோரக்கூடிய சூழலில், எங்கள் செலவில் இந்த ஒப்பந்தத்தின் மற்றும் பிற எந்த ஆவணங்களின் அச்சு நகலை எடுத்து, நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.
  17. தொடர்பு. இந்த விதிமுறைகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை https://help.quora.com/hc/en-us/... மூலம் தொடர்புகொள்ளத் தயங்கவேண்டாம். Quora நிறுவனமானது 650 Castro Street, Suite 450, Mountain View, CA 94041 என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு டெலாவேர் நிறுவனமாகும்.