வர்த்தக முத்திரைக் கொள்கை

கடைசியாகப் புதுப்பித்தது: 18, டிசம்பர், 2017

Quora-வில், மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை எங்கள் பயனர்கள் மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். Quora வர்த்தக முத்திரைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் பெரிய எழுத்திடப்பட்ட சொற்கள், Quora சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ள அதே அர்த்தம் கொண்டவை. அது இந்த கொள்கையை அதன் விதிமுறைகளுடன் சேர்த்துக் கொள்கிறது.

வர்த்தக முத்திரை மீறலை ஊக்கமிழக்கச் செய்தல்

சரக்குகள் அல்லது நிதியளிப்பு மூலத்தைப் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த வகையிலும் வர்த்தக முத்திரை பயன்படுத்தப்படக்கூடாது. மற்றவர்களின் வர்த்தக முத்திரைகளை நீங்கள் மீறினால், உங்கள் உள்ளடக்கம் முழுமையாகவோ பகுதியாகவோ அகற்றப்படலாம் அல்லது இடைநிறுத்தப்படலாம். மற்றவர்களின் வர்த்தக முத்திரைகள் அல்லது பிற அறிவுசார் சொத்துரிமைகளைத் தொடர்ச்சியாக மீறுபவர்கள் அல்லது தொடர்ச்சியாக மீறுவதாக குற்றஞ்சாட்டப்படும் பயனர்களின் கணக்குகளை சரியான சூழ்நிலைகளில் எங்கள் விருப்பத்தின்படி முடக்குவது மற்றும்/அல்லது நிறுத்துவது எங்களின் கொள்கை.

வர்த்தக முத்திரை உரிமையாளர்களுக்கான துணையாதாரம்

உங்கள் வர்த்தக முத்திரை Quora-வில் மீறப்படுவதாக நம்புகிற வர்த்தக முத்திரை உரிமையாளராக நீங்கள் இருந்தால், உங்கள் கவலையை எங்களுக்குத் தெரிவிக்க உங்களுக்கு ஒரு இயங்குமுறையை வழங்குகிறோம். நாங்கள் பொருத்தமாகப் பதிலளிப்பதற்கு உதவ, பின்வரும் தகவலை எங்களுக்கு வழங்கும்படி கேட்கிறோம்:

  1. முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் தொடர்பு உள்ளிட்ட உங்கள் முழுப் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்
  2. வர்த்தக முத்திரை அடையாளம் மற்றும் பதிவு உரிமைகளின் சான்று
  3. வர்த்தக முத்திரை உரிமை உரிமையாளருடனான உங்களின் உறவுமுறை
  4. மீறுவதாக நீங்கள் நம்புகின்ற Quora தளத்தில் உள்ள இருப்பிடத்தின் (எ.கா., URL இணைப்பு) நியாயமான அடையாளங்கள்
  5. கேள்விக்குரிய பயன்பாடு உங்கள் வர்த்தக முத்திரை உரிமைகளை மீறுவதாக நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்பதற்கான ஒரு சிறிய விளக்கம்
  6. மீறல் பற்றிய உங்கள் அறிக்கையில் உள்ள அனைத்து தகவல்களும் துல்லியமானவை என்பதை சரிபார்ப்பது; உரிமை உரிமையாளர்கள், அதன் முகவர் அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத முறையில் விவரிக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்துக்களின் பயன்பாடு என்று நீங்கள் நம்புகிறீர்கள்; மற்றும் நீங்கள், மீறப்படும் அறிவுசார் சொத்தின் உரிமையாளர் அல்லது உரிமையாளரின் சார்பாக செயல்படுவதற்கு அங்கீகாரம் பெற்றவர்

உங்கள் வசதிக்காக, பதிப்புரிமை மீறலை நீங்கள் புகாரளிக்க விரும்பினால், மின்னஞ்சல் மூலம் நீங்கள் நிறைவு செய்து அனுப்ப இந்த வலைதளப் படிவத்தை வழங்குகிறோம்.

வேகமாக கையாள்வதற்கு, எங்கள் வலைத்தளப் படிவத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மாற்று வழிமுறையைப் பயன்படுத்தினால், உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்துவது தாமதமாகலாம்.